ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்ட இந்திய தூதரக ஊழியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு வேவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவரை உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சதேந்திர சிவால் எனவும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அவர் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ராணுவம் தொடர்பான முக்கியமான தகவல்களை பணம் பெற்றுக் கொண்டு ஐஎஸ்ஐக்கு இந்திய வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் தெரிவிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
undefined
உத்தரப்பிரதே மாநிலம் ஹபூரில் உள்ள ஷாமஹியுதின்பூர் கிராமத்தை சேர்ந்த சதேந்திர சிவால், பாகிஸ்தானுக்கு வேவு பார்க்கும் அமைப்பில் முக்கிய பங்காற்றியவர் என தெரிகிறது. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தனது பதவியை பயன்படுத்தி ரகசிய ஆவணங்களை அவர் பெற்றதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் முதல் பாரத் அரசி விற்பனை: மத்திய அரசு நடவடிக்கை!
பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை பணம் பெற்றுக் கொண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணைக்கு மீரட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக சதேந்திர சிவல் வரவழைக்கப்பட்டுள்ளார். அவரது பதில்களில் திருப்தி இல்லாததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஆனாலும், விசாரணையின் இறுதியில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராக சதேந்திர சிவல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.