பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. குறிப்பாக மகாதேவபுரா, தோடாகன்னெல்லி உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் புகுந்தது. பல ஏரிகள், குளங்கள் நிரம்பியதால், மழைவெள்ளம் செல்வதற்கு வடிகாலின்றி குடியுருப்பு பகுதிக்குள் சென்றது.
தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை: பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார்
நீர் செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுனங்களும் கட்டிடங்களை கட்டியதால், மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கியது. இதையடுத்து மழைகுறைந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணியில் பெங்களூரு மாநகராட்சி இறங்கியுள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் “சமானிய மக்கள், பெரு நிறுவனங்கள்யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிங்கள் எழுப்பியிருந்தால், அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
கொரோனாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு குறித்து தணிக்கை: நாடாளுமன்றக் குழு அறிக்கை
இதையடுத்து, மகாதேவபுராவில் உள்ள பெகமானே டெக்பார்க், புர்வா பாரடைஸ், ஆர்பிடி, தாடகனஹெல்லியில் உள்ள விப்ரோ நிறுவனம், பெலந்தூரில் உள்ள எகோ-ஸ்பேஸ், ஹூடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவிர நியூ ஹரிசான் கல்லூரி, ஆதர்ஷா ரீட்ரீட், கொலம்பியா ஆசியா மருத்துவமனை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மகாதேவ்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பெங்களூரு மாநகராட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெரிய கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிங்களை இடிக்கும் பணியில் முதல்கட்டமாக மாநகராட்சி இறங்கியுள்ளது.
செல்லகட்டா, சின்னப்பன ஹல்லி, பசவன்னநகர், ஸ்பைசி கார்டன், எஸ்ஆர் பசவனபுரா ஆகியவை மகாதேவபுரா பகுதிக்குள் வருகின்றன. இவை அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
மாநகராட்சி சார்பில் நில அளவையர் மூலம் நிலங்கள் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கட்டிங்கள் மார்க் செய்யப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸாரும் பாதுகாப்பு அழைக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு
ராகம்வா சூப்பர் மார்க்கெட் பகுதியில் உள்ள சாய் கண் மருத்துவமனையின் சுற்றுச்சுவர், 3 ஆக்கிரமிப்பு கட்டிங்கள், சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது தவிர பிரஸ்டீஜ் நிறுவனத்தின் கட்டிடம், கோபாலன் பள்ளிக்கூடம், ஹூடியில் உள்ள மகாவீர் அடுக்குமாடி வீடு ஆகியவையும் இடிக்க நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. ஸ்பைஸி கார்டன் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருநகரில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பதால் அதை அகற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றம் தலையிடும் முன் சர்வேசெய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன