டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு 6 நாட்கள் குளிர்கால விடுமுறை.. எப்போது முதல் தெரியுமா?

By Ramya s  |  First Published Dec 7, 2023, 9:20 AM IST

வரும் ஜனவரி 1 முதல் 6 வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


குளிர்கால விடுமுறைக்காக தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஜனவரி 1-6 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் குளிர்கால விடுமுறை விடப்படும். ஆனால் .காற்று மாசுபாடு காரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், இந்த ஆண்டு 6 நாட்களுக்கு மட்டுமே குளிர்கால விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நச்சுப்புகை காரணமாக  நவம்பர் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குளிர்கால விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்க பள்ளி அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டது. அதன்படி, கல்வி இயக்குனரகம் குளிர்கால விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் "2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கான குளிர்கால விடுமுறை ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை நடைபெற திட்டமிடப்பட்டது.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இருப்பினும், டெல்லியில் மோசமான காற்றின் தரம் காரணமாக எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை குளிர்கால விடுமுறையின் ஒரு பகுதி அனுசரிக்கப்பட்டது.

100+ இணையதளங்களை தடை செய்த மத்திய அரசு.. பகுதி நேர வேலை மோசடியில் சிக்காமல் எப்படி தப்பிப்பது?

2023-2024 ஆம் ஆண்டுக்கான குளிர்கால விடுமுறையின் மீதமுள்ள பகுதி ஜனவரி 1 முதல் ஜனவரி 6, 2024 வரை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியின் அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் இந்த தகவலை ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கற்பித்தல் உட்பட அனைத்து பங்குதாரர்களிடையே பரப்புவதற்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!