
விவசாயிகளை சுரண்டினால், ஏமாற்றினால், அவர்களின் நலனுக்கு விரோதமாக நடந்து கொண்டால் நான் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்று அதிகரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர்ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு முதல்வராக கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத்பதவி வகித்து வருகிறார். இவர் வருகைக்கு பின், மாநிலத்தில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள பாண்டா பகுதியில் விவசாயிகளிடம் இருந்து அ ரசு சார்பில் கோதுமை கொள்முதல் நடந்து வந்தது. இந்த இடத்துக்கு நேற்று முன் தினம் சென்ற முதல்வர் ஆதித்நயாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுகையில், “ விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதலை வரும் ஜூன் 15ந் தேதிக்குள் முடித்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் குறித்த பட்டியல், அவர்களிடம் இருக்கும் தானியங்கள், அதன் நிலை ஆகியவை குறித்து அதிகாரிகள் அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
இந்த விசயத்தில் விவசாயிகளை சுரண்டினால், ஏமாற்றினால், அவரின் நலனுக்கு விரோதமாக நடந்து கொண்டால் நான் பொருத்துக்கொள்ள மாட்டேன்.
வறட்சி பாதித்த மண்டலமான பண்டேல்கண்ட்பகுதியில் விரைவில் அதிகமான நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு, மழைகாலத்தில் விவசாயத்துக்கு தேவையான நீர் சேமிக்கப்படும். மேலும், இப்பகுதி மக்களுக்கு திறந்த வௌியில் மலம் கழிப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவு குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.