"சாமியாரின் உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை பாராட்டுகிறேன்" - பினராயி கூல் பேட்டி

 
Published : May 21, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"சாமியாரின் உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை பாராட்டுகிறேன்" - பினராயி கூல் பேட்டி

சுருக்கம்

pinarayi appreciates girl who chops off priest genitals

கேராளவில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் மர்ம உறுப்பை இளம்பெண் வெட்டினார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனாவுக்கு இதே நிலை நடந்தது. அதன்பின், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து, நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெண்களுக்கு தைரியம் வேண்டும். நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றால்தான் நாட்டுக்கு சுதந்திரம் வந்தது என நாம் உணர முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பை சமூக விரோதிகள் இதுவரை கொடுக்கவில்லை.

இந்நிலையில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை நான் பாராட்டுகிறேன். அந்த பெண்ணுக்கு அரசு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார்.

அப்படியானால், இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே. இனி மாணவிக்கு தேவையான ஆதரவு அளித்தால் மட்டும் போதும்’’ என படு கூலாக பதில் அளித்தார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்