“இனி எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது” – இலங்கை அமைச்சர்கள் உறுதி...!!!

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 06:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
“இனி எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது” – இலங்கை அமைச்சர்கள் உறுதி...!!!

சுருக்கம்

இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று லங்கை அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்

டெல்லியில் இந்தியா - இல்ஙகை அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று லங்கை அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். மேலும் இரு நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டும் போது உயிர் சேதம் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். 

இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க கூட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த கூட்டுக் குழு கூட்டமானது 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 115 படகுகளை விடுவிப்பது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில், சுஷ்மா சுவராஜ், ராதா மோகன்சிங், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மற்றும் இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக மீனவர்களின் மீது இலங்கை அதிகாரிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதால் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!