“மீனவர் பிரச்சனை இந்த தலைமுறை வரை நீளும்” - பொன்.ராதா பரபரப்பு பேட்டி

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 05:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
“மீனவர் பிரச்சனை இந்த தலைமுறை வரை நீளும்” - பொன்.ராதா பரபரப்பு பேட்டி

சுருக்கம்

இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது,

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்த கூட்டத்தில் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் 115 படகுகளையும், சிறையிலிருக்கும் 9 மீனவர்களையும் கட்டாயமாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

மீனவர் பிரச்சனை அடுத்த தலைமுறை வரை நீடிக்குமா என்பது தெரியாது என்றும், இந்த தலைமுறை வரை நீளும் என தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சனைக்கு முந்தைய ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்,  இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய பிரதமர் மோடி அக்கறையுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சனை மத்திய அரசு மட்டும் முடியவு செய்யும் விஷயம் கிடையாது என்று தெரிவித்த அவர்அ, ஒரே நாளில் தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும், அடுத்த மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் குழு  மற்றும் இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!