2001-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் - 4,600 இந்திய வீரர்கள் பலி...!!!

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 03:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
2001-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான்  தாக்குதல்  -  4,600 இந்திய வீரர்கள் பலி...!!!

சுருக்கம்

கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இதுவரை 4, 675 இந்திய வீரர்கள்  உயிரிழந்துள்ளனர் என தகவல்  உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. 

குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், பங்கஜ் தார்வே கடந்த செப்டம்பர் 22-ந்தேதி தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கார்கில் போருக்கு பின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல், துப்பாக்கிசூட்டில், பலியான  இந்திய வீரர்கள் குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார். அந்த விவரம் கடந்த மாதம் 26-ந்தேதி அவருக்கு அளிக்கப்பட்டது. அதில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 15 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது நடத்திய தாக்குதலில், இதுவரை 4,675 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரியவந்துள்ளது. அதேசமயம், எத்தனை முறை அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பதை தெரிவிக்கவில்லை. 

அதேசமயம், 2001-ம் ஆண்டில் இருந்து நாட்டில் 7 ஆயிரத்து 908 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் தீவிரவாத தாக்குதல்களில் மட்டும்  1,174 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

டாடா குழுமத்திற்கு வந்த சோதனைய பார்த்தீங்களா..? வாடகைக்கு வந்த ரத்தன் டாடா வாழ்ந்த வீடு..
1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்த கப்பல்.! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? திக்திக் நிமிடங்கள்.!