
குருவாயூரில் ருமேனியா நாட்டு பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், குருவாயூர் அருகே மம்மியூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன்(48). வாசனை திரவியங்கள் ஏற்றுமதி தொழில் செய்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ஹரிகரன் வியாபாரம் தொடர்பாக நேபாளம் சென்றார்.
அப்போது, ருமேனியா நாட்டை சேர்ந்த ராபர்ட்டீனா(40) என்பவரை சந்தித்தார். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், அதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்ததால், தவிர்த்தனர்.
இதையடுத்து, திருமணம் செய்யாமலே குருவாயூரில் உள்ள மம்மியூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதையடுத்து, நடைமுறை சிக்கலை களைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட்டீனா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, திடீரென கிழே விழுந்து இறந்தார்.
இதுதொடர்பாக, குருவாயூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில்,ராபர்ட்டீனா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது கணவர் ஹரிகரன், எந்நேரமும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பலருடன் நீண்டநேரம் சாட்டிங் செய்கிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.