பிரிட்டன் அரசு வசம் இருக்கும் விலை மதிப்பில்லாத கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு வசம் இருக்கும் விலை மதிப்பில்லாத கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத் மணிமகுடத்தில் கோகினூர் வைரம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் எடுத்துச் செல்லப்பட்ட விலை மதிப்பில்லாத அந்த கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவருவது நீண்டகாலக் கோரிக்கையும். தற்போது பிரிட்டன் ராணி எலிசபெத் காலமாகிவிட்டதையடுத்து, அந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
உலகப் பட்டினிக் குறியீடு: 121 நாடுகளில் இந்தியாவுக்கு 107-வது இடம்: இலங்கையைவிட மோசம்
பிரிட்டன் ராணியின் மணி மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கோகினூர் வைரம் 108 காரட், 21.6 கிராம் எடை கொண்டதாகும். ஆந்திரம் மாநிலம், குண்டூர் அருகே உள்ள கொல்லூர் வைர சுரங்கத்திலிருந்து இந்த கோகினூர் வைரம் எடுக்கப்பட்டது.
விலைமதிப்பில்லாத பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடிய இந்த வைரம் இந்தியாவை ஆண்ட பல வம்சாவழி மன்னர்களிடம் இருந்துள்ளது. 108 காரட் மதிப்பு கொண்ட இந்த கோகினூர் வைரத்தை மகாராஜா துலீப் சிங் ராணி விக்டோரியாவுக்கு பரிசாக வழங்கினார்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்குள் வந்தபின், 1851ம் ஆண்டு கோகினூர் வைரம் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ராணி விக்டோரியாவின் கிரீடத்தில் பொறிக்கப்பட்டது, அதன்பின் ராணியாக வந்த ராணி எலிசபெத் கட்டுப்பாட்டில்தான் கடந்த 70 ஆண்டுகளாக இருந்தது.
மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கனவு தூண்டலும், நிறைவேறாத ஆசையும்!
பிரிட்டன் வசம் இருக்கும் கோகினூர் வைரம், உண்மையில் இந்தியாவுக்கான சொத்தாகும். இந்த வைரத்தை மீட்டு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது
இந்த கோரிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில் “கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோகினூர் வைரம் மீட்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்தி அரசு பதில் அளித்தது. இந்த விவகாரம் பிரிட்டன் அரசிடம் ஒவ்வொரு முறையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது, இனியும் தொடர்ந்து வலியுறுத்தி கோகினூர் வைரத்தை இந்தியா மீட்டுவர முயற்சிப்போம். இந்த விவகாரத்தில் மனநிறைவான தீர்வு கிடைக்கும் வரை முயற்சிப்போம்” எனத் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்: எங்கு, எப்போது தொடக்கம்?
பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் மறைவுக்குப்பின் அவரிடம் இருந்த கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு எடுத்துவரும் கோரிக்கைகளை வலுப்பெற்றுள்ளன