மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் 5 அடி நீளத்தில் தண்ணீரில் வாழும் பாம்பு நேற்று பிடிபட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் 5 அடி நீளத்தில் தண்ணீரில் வாழும் பாம்பு நேற்று பிடிபட்டது. விஷத்தன்மை இல்லாத இந்த பாம்பை தனியார் தொண்டுநிறுவன வனஉயிரின பாதுகாவலர்கள் பிடித்து நீர்வாழ் பகுதியில் விட்டனர்
தனியார் தொண்டுநிறுவன்தைச் சேர்ந்த வன உயிரின பாதுகாவலர்கள் தரப்பில் கூறுகையில் “ மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு படையினர் அழைத்தனர். அமித் ஷா பங்களாவில் பாம்பு இருக்கிறது பிடிக்கவேண்டும் என்றனர்.இதையடுத்து, உடனடியாக 2 பேர் கொண்டவன ஊழியர்கள் குழு அங்கு சென்றனர்.
அரசியல் கத்துக்குட்டிகெல்லாம் பதில் அளிக்க முடியாது! அமித் ஷாவை விளாசிய நிதிஷ் குமார்
பாதுகாவலர்கள் அறையில் மரஇடுக்கில் இருந்த5 அடி தண்ணீர் பாம்பை வன ஊழியர்கள் பிடித்தன்ர. இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது. நீர்நிலைகள், குளம், ஓடை, ஏரிகளில் வாழும், டெல்லியில் மழைக்காலத்தில் அங்கிருந்து வெளியேறியிருக்கலாம்.
மசூதியில் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் பேச்சை நிறுத்திய அமித் ஷா
இந்த பாம்பு வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். ஆதலால், இதைப் பிடித்து மீண்டும் நீர் நிலையில்விட்டுவிட்டோம்” எனத் தெரிவித்தனர்.
பிரதமர் பதவிக்காக பாஜகவின் முதுகில் குத்திவிட்டார் நிதிஷ் குமார்: அமித் ஷா குமுறல்
இது குறித்து தனியார் தொண்டுநிறுவனமான வனஉயிரிகாப்பகத்தின் நிறுவனர் கார்த்திக் சத்யநாராயன் கூறுகையில் “ மத்தியஅ மைச்சர் அமித் ஷாவீட்டில் உள்ள அதிகாரிகள் உதவிக்கு எங்களை அழைத்தமைக்கு நன்றி. இதன் மூலம் வன உயிரினங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை தெரிகிறது, இந்த உணர்வோடு மற்றவர்களும் இருக்கவேண்டும். பாம்பை அடிப்பதை விட்டு, எங்களைப்போன்ற வனஉயிரின காப்பார்களுக்குதகவல் தெரிவித்தால் அதை பாதுகாப்பாக மீட்போம்” எனத் தெரிவித்தார்