இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்முழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி!!

Published : Oct 14, 2022, 10:58 PM IST
இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்முழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி!!

சுருக்கம்

இந்தியாவிலேயே தயாரான அணு சக்தியால் இயங்கக் கூடிய ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்முழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவிலேயே தயாரான அணு சக்தியால் இயங்கக் கூடிய ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்முழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்திய கப்பற்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் அணுசக்தி கப்பல்களான ஐ.என்.எஸ். சக்ரா, அகூலா -2 ஆகியவை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் கட்டும் பணியை இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் துவக்கியது.

இதையும் படிங்க: குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? விளக்கம் அளித்தது தேர்தல் ஆணையம்!!

அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் 2012 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் கப்பற்படை தளத்தில் வெள்ளோட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலில் அணு உலை இயங்க துவங்கியது. மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல், 85 மெகாவாட் திறன் கொண்ட நீர் அழுத்த அணு உலைகள் மூலம் இயங்கும். இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்தபடி ஏவுகணைகளை செலுத்தி எதிரிகளின் இலக்கை தாக்க முடியும்.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி

இந்த நீர்மூழ்கி கப்பல் 2018 ஆம் ஆண்டு பணிகள் முழுமையடைந்து அது கடற்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வங்களா விரிகுடா கடற்பகுதியில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அணுசக்தியில் இயங்கும் நீர்முழ்கி கப்பல்கள் வைத்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!