ஆதிபுருஷ் படத்தை தடை செய்வோம்: சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி!

Published : Jun 18, 2023, 12:40 PM IST
ஆதிபுருஷ் படத்தை தடை செய்வோம்: சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி!

சுருக்கம்

மக்கள் கோரிக்கை வைத்தால் ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்வோம் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்

நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியானதில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தில் வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் கோரிக்கை வைத்தால் ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்வது பற்றி அரசு சிந்திக்கும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல், “வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தள் பேசும் வார்த்தைகளை, ஆதிபுருஷ் திரைப்படத்தில் வரும் பஜ்ரங்பாலி (ஹனுமான்) கதாபாத்திரத்தை பேச வைத்துள்ளனர். இது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதனை நான் கண்டிக்கிறேன்.” என்றார்.

விஜய்யின் லியோ படத்திற்கு எதிர்ப்பு..! ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைக்கும்- எச்சரிக்கும் பசுமைத்தாயகம்

கடவுள்களின் உருவத்தை இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், மதத்தின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பதாகவும் பாஜகவை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மறைமுகமாக சாடினார். சிறிய விஷயங்களுக்காக பொருட்களை எரிப்பவர்கள், தியேட்டர்களை மூடுபவர்களை தற்போது காணவில்லை என்று தெரிவித்த அவர், Kerala Files, Kashmir Files போன்ற திரைப்படங்களுக்காக பெரிய பெரிய அறிக்கைகளை வெளியிட்ட பாஜக மூத்த தலைவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள் எனவும் சாடினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பூபேஷ் பாகல், ராமர், ஹனுமான் ஆகியோரின் முந்தைய படைப்புகள் கனிவானதாகவும் பக்தி நிறைந்ததாகவும் இருந்தது. வால்மீகி ராமாயணத்தில் காட்டப்பட்ட அவர்களது படைப்புகள், சக்தியும் பக்தியும் நிறைந்ததாக இருந்தது. ஆனால் ஆதிபுருஷ் படத்தில் ராமரை போர்வீரனாகவும், அனுமனை கோபப் பறவையாகவும் சித்தரித்துள்ளனர். ராமரும், ஹனுமானும் கண்ணியமற்ற வார்த்தைகளை பேச வைக்கப்பட்டுள்ளனர். ஹனுமான் கதாபாத்திரத்திற்கான வசனம் மிகவும் அடிமட்ட அளவில் உள்ளது. இப்படத்தின் மூலம் ராமர் மற்றும் ஹனுமன் உருவம் சிதைக்கப்படுகிறது. நாம் நம்பிக்கை கொண்ட கடவுள்களை, நாம் வழிபடும் கடவுள்களை அப்படி சித்தரிப்பது சரியல்ல. இந்தப் படம் பார்க்கும் இளைஞர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.?” என கேள்வி எழுப்பினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ராமாயணத்தை தொலைக்காட்சி தொடராக எடுக்க ராமானந்த் சாகரை கேட்டுக்கொண்டார். அந்த தொடர் ஒளிபரப்பப்பட்டபோது, மக்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு அதனை பார்த்ததாகவும், கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், அதனால் அதற்கு பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்