காயமடைந்த காட்டு யானையை காப்பாற்றச் சென்ற மருத்துவர் யானை மிதித்து சாவு

By Velmurugan s  |  First Published Sep 2, 2023, 10:16 AM IST

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஷக்லேஷ்புரா வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் சுற்றித்திரிந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்ற மயக்க ஊசி செலுத்தும் நிபுணரை தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷக்லேஷ்புரா மிகப்பெரிய பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

Tap to resize

Latest Videos

கடந்த ஒரு வார காலமாக அந்த வனப்பகுதியில் யானை ஒன்று காயமடைந்த நிலையில் சுற்றித்திரிந்து வந்தது. இதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் காயமடைந்த இந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான வன காவலர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். 

Aditya l1 launch: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக இஸ்ரோவை கலக்கும் தென்காசி பெண் விஞ்ஞானி

யானை காயம் அடைந்த நிலையில் சுற்றித் திரிவதால் முதலில் அதற்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக மருத்துவ குழுவில் உள்ள வெங்கடேஷ் என்ற மயக்க ஊசி செலுத்தும் நிபுணர் தனது துப்பாக்கியின் வாயிலாக மயக்க ஊசியை அந்த யானைக்கு செலுத்தியுள்ளார். 

இருப்பினும் யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் துரத்தி வெங்கடேஷை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பித்து சென்று விட்டது. தொடர்ந்து யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!