பிரதமர் மோடி தலைமையிலான விண்வெளி ஆய்வுகள் வர்த்தக ரீதியாக இந்தியர்களுக்கு பயன்படும்: கிறிஸ் ஹாட்ஃபீல்ட்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 2, 2023, 9:14 AM IST

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு விண்வெளி ஆராய்ச்சியில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது இந்தியர்களுக்கு வர்த்தக ரீதியில் பயனுள்ளதாக அமையும் என்று அப்பல்லோ மர்டர்ஸ் ஆசிரியர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
 


இந்தியா விண்வெளி ஆய்வில் கடந்த காலங்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி இருந்தது. நிலவின் தென் துருவத்திற்கு இதுவரை யாரும் விண்கலம் அனுப்பியது இல்லை. ஆனால், இந்தியா இதில் வெற்றி கண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவுக்கு அனுப்பி இருந்த சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. பின்னர் இதில் இருந்து ரோவர் வெளியேறி வெற்றிகரமாக தனது பணியை செய்து வருகிறது. நிலவில் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ கூறியிருந்ததைப் போல, நிலவில் சல்பர் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது. தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

 சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்.. விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடக்கம்

இந்த நிலையில் இன்று சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா L1 என்ற விண்கலத்தை அனுப்புகிறது. சூரியனில் நடக்கும் மாற்றங்கள், அதைச் சுற்றி இருக்கும் கரோனா குறித்து ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. கரோனாவில் இருந்துதான் அதிகளவில் வெப்பம் வெளியாகிறது. மேலும், புயல் காற்று உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான  கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆதித்யா L1 பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் ஏவப்பட்ட நாளில் இருந்து 120 நாட்களில் சூரியனுக்கு அருகில் L1 பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த நிலையில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் குறித்து அப்பல்லோ மர்டர்ஸ் ஆசிரியர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில், ''விண்வெளி வர்த்தகம், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள், வானிலை செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு, நிலவை ஆராய்வது,  சூரியன் ஆய்வு என இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் நடந்தவை. எனவே இது ஒரு விண்வெளிப் பந்தயம் அல்ல. இது அனைவருக்கும் ஒரு புதிய விண்வெளி வாய்ப்பாகும். 

சூரியனுக்கு வெளியே வெப்பத்தை உமிழும் கரோனாவின் ரகசியத்தை உடைக்குமா ஆதித்யா எல் 1?

இப்போது இருக்கும் போட்டியே தொழில்நுட்பத்தை பொருளாதார வழியில் மாற்றுவது யார் என்பதுதான். ஒவ்வொரு நிறுவனத்திற்கும், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நாடுகளுக்கும் லாபகரமான விண்வெளி வணிகங்கள் உள்ளன. அதைச் செய்வதற்கு இந்தியா மிகவும் வலுவான அந்நியச் செலாவணி நிலையில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய விண்வெளி தொடர்பான பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். மிகவும்  புத்திசாலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றி வருகின்றனர். வணிக ரீதியாக இந்திய மக்களும் பயனடைவார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!