உணவுக்காக வாழைத்தோப்புக்குள் நுழைந்த யானை.. மின்வேலியில் ஷாக் அடித்து இறந்த துயரம் !!

Published : Jun 30, 2023, 02:49 PM IST
உணவுக்காக வாழைத்தோப்புக்குள் நுழைந்த யானை.. மின்வேலியில் ஷாக் அடித்து இறந்த துயரம் !!

சுருக்கம்

அசாமில் வாழை மரத்தோப்பில் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம், கோல்பரா மாவட்டத்தில் வாழை தோப்பு அருகே ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. தூப்தோரா, ரோஜுலி வனப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆண் யானையின் சடலத்தை கிராம மக்கள் கண்டுப்பிடித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் முகம் மற்றும் தும்பிக்கையில் காயங்கள் இருப்பதை கண்டனர்.  யானை இறந்ததற்கு முக்கிய காரணம் மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில், யானையின் முகம் மற்றும் தும்பிக்கையில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

யானைகளிடம் இருந்து வாழைப்பழங்களை காக்க விவசாயிகள் மின்சாரம் பாய்ச்சியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யானை மீது மின்சாரம் தாக்கியதற்கான சில தடயங்களும் கிடைத்துள்ளன என்றும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிதான் ஆரம்பமே..! தமிழகத்தில் இந்த இடங்களில் 5 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை - முழு விபரம்

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!