#UnmaskingChina:சீன மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் மனைவி கிடைத்த கெளரவம்...தெலங்கான முதல்வருக்கு ராயல் சல்யூட்!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2020, 1:09 PM IST
Highlights

சீன ராணுவத்துடன் மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவியை துணை கலெக்டராக நியமனம் செய்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

சீன ராணுவத்துடன் மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவியை துணை கலெக்டராக நியமனம் செய்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில்,  தனது இன்னுயிரை தியாகம் செய்தவர்களில் ஒருவர் தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டையை சேர்ந்த ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு.  இதைத்தொடர்ந்து, கர்னல் சந்தோஷ் பாபுவின்  குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம் என்றும், ஒரு வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என  அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். லடாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த  தமிழக இராணுவ வீரர் பழனி குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அம்மாநில முதலவர் சந்திரசேகரராவ் அறிவித்து இருந்தார். 


 
இந்நிலையில் தற்போது சந்தோஷ் பாபுவின் மனைவி துணை கலெக்டராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தவிர வீரமரணமடைந்த 19வீரர்களின் குடும்பங்களுக்கும் சுமார் 10லட்சம் ருபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார்  சந்திரசேகரராவ். தமிழக அரசு நமது தமிழக வீரர் பழனி குடும்பத்தாரை கவனத்தில் கொள்ளுமா..?

click me!