அப்பாடா... ஒரு வழியா 3வது இடத்திற்கு வந்த தமிழ்நாடு... மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2020, 10:41 AM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4.2 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4.2 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,282 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,37,196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,669 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,32,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,170 பேர் உயிரிந்துள்ளனர். 2வது தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் 59,746 பாதிப்பு மற்றும் 2,175 உயிரிழப்புடன் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 59,377 பாதிப்பு மற்றும் 757 உயிரிழப்புடன் 3வது இடத்தில் உள்ளது. 27,260 பாதிப்புடன் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 

click me!