கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததை கண்டித்ததால் ஆத்திரம்... கணவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி!

 
Published : May 10, 2018, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததை கண்டித்ததால் ஆத்திரம்... கணவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி!

சுருக்கம்

wife killed and cutted her husband body

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி தூக்கி எறிந்த மனைவி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தைச் சேர்ந்த பாசுராஜ் பாசு தனது மனைவி கல்பனா, இவர்கள் கடந்த 9 வருடத்திற்கு முன்பாக திருமணமானது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பாசுராஜின் நண்பர் ஒருவர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மனைவி, போலீசில் புகார் அளித்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாசுராஜின் மனைவி மற்றும் 2 நண்பர்களுடன் சேர்ந்து பாசுராஜை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கல்பனா மற்றும் பாசுராஜின் நண்பர்கள் மூன்று பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடன் நடத்திய விசாரணையில், பாக்கிராசு நண்பருக்கும் கல்பனாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. கணவர் பாசுராஜு வேலைக்கு சென்ற நேரம் பார்த்து மனைவியின் கள்ளக் காதலன் மற்றும் மனைவி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு நாள் வேலைக்கு சென்ற பாசுராஜூ சீக்கிரமாகவே வந்துள்ளார். அப்போது மனைவியும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து இருவரையும் கண்டித்த கணவர் பாசுராஜூ, வெளியில் சென்று மது அருந்தி விட்டு வந்து கல்பனாவை அடித்துள்ளார். அப்போது இருவருக்கும் சண்டை வந்துள்ளது சண்டையில் கல்பனா அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதனை மறைக்க பாசுராஜின் நண்பர்களுடன் இணைந்து அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி பையில் போட்டு கர்நாடகா-கோவா எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீசப்பட்டிருந்த உடலை கைப்பற்றினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!