
இதற்கு கிச்சா சுதீப், `மற்ற மொழிகளைப்போல இந்தியாவின் ஒரு மொழிதான் இந்தி’ எனக் கூறினார். இவர்களின் இந்தக் கருத்து பகிர்வு இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்க ஆரம்பித்தனர். அஜய் தேவ்கன் பாஜகவின் ஊதுகுழலாகப் பேசுகிறார் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷாந்த் மேத்தாவுடனான உரையாடலின் போது பேசிய பாடகர் சோனு நிகம், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அந்த மொழியை திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஏன் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று இந்தி மொழியை யாரும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்தும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதே சமயம் உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும் நாம் அறிவோமா? உலகின் பழமையான மொழி எது என்று சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது.உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள் என்றும் அவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்திய நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் எந்த மொழியை பேச விரும்புகிறார்களோ அந்த மொழியை பேச அவர்களை முடிவெடுக்கவிடுங்கள் என்றும், அவர்கள் பேச விரும்பும் மொழியை முடிவு செய்யுங்கள்” என்று சோனு நிகம் தெரிவித்துள்ளார். 32 மொழிகளில் பாடிய தான், ஒரு விமான பயணத்தின்போது, இந்தியில் பேசியதாகவும், அதற்கு விமான பணிப்பெண் தனக்கு ஆங்கிலத்தில் பதிலளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிறர் மீது மொழியைத் திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிப்பதா? அவர்கள் பேச விரும்பும் மொழியை பேச மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும்" என்றார். மேலும் அஜய் தேவ்கனுக்கு சரியான பதில் அளித்துள்ள சோனு நிகம், இந்த நாட்டில் மக்களை மேலும் பிளவுபடுத்த வேண்டாம், இந்தி நமது தேசிய மொழி என்று எங்கே எழுதப்பட்டுள்ளது ? என்று கடும் கண்டனத்தை அஜய் தேவ்கனுக்கு கொடுத்துள்ளார்.