சபரிமலை தீர்ப்பு! கேரள பெண்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? சு.சுவாமி கேள்வி!

Published : Oct 06, 2018, 02:08 PM ISTUpdated : Oct 06, 2018, 02:10 PM IST
சபரிமலை தீர்ப்பு! கேரள பெண்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? சு.சுவாமி கேள்வி!

சுருக்கம்

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச்நீதிமன்ற தீர்ப்பை, கேரள பெண்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச்நீதிமன்ற தீர்ப்பை, கேரள பெண்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் , வரவேற்றும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கேரளாவில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.  அப்போது உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நிலையில், பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கேரள பெண்கள் ஏன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்? 'அந்த 5 நாட்களில்' அவர்களை கோயிலுக்கு செல்ல தூண்டவில்லை. அது அவரவர் விருப்பம். கடவுள் என்ன நினைக்கிறார் என்பது யாருக்குத் தெரியும்? என்று பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே சு.சுவாமி, வரவேற்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!