ஓய்வு பெற்ற நீதிபதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...! மனைவியும் அதே நொடியில் தற்கொலை..!

Published : Oct 06, 2018, 02:00 PM IST
ஓய்வு பெற்ற நீதிபதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...! மனைவியும் அதே நொடியில் தற்கொலை..!

சுருக்கம்

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைசெய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது   

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தர்களை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருப்பதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதியான பி. சுதாகர் என்பவர் கடந்த சில நாட்களாக தீராத  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால், திருப்பதி - ரேணிகுண்டா ரயில் நிலையங்கள் இடையே வந்துக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை செய்துக்கொண்டார். இவரது இறப்பு செய்தியை கேட்டறிந்த அவரது மனைவியும் வேறு ஒரு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சமீப காலமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரது மனைவியும் தனது கணவரை இழந்த துக்கத்தில் உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!