
இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தில் மூடநம்பிக்கை துரதிர்ஷ்டவசமாக ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து அரசியல்வாதிகள் வெளிப்படையாகவோ அல்லது இரகசியமாகவோ அவற்றை நம்புகிறார்கள்.
சில சமயங்களில் நன்கு படித்த அரசியல்வாதிகள்கூட மூடநம்பிக்கை கொண்டவர்களாக மாறி, உண்மை அடிப்படையிலான முடிவுகளை எடுக்கத் தவறிவிடுகிறார்கள். தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில், சாம்ராஜநகருக்குச் சென்ற எந்த அமைச்சரும் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்பது போன்ற ஒரு கட்டுக்கதை பல தசாப்தங்களாக வளர்க்கப்படுகிறது.
1980ல், சாம்ராஜநகருக்குச் சென்ற அப்போதைய முதல்வர் டி.தேவராஜ் அர்ஸ், அவர் சென்ற ஆறு மாதங்களிலேயே ஆட்சியை இழந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குண்டுராவ் அந்த ஊருக்குச் சென்றார். அவருக்கும் அதே கதிதான் வந்தது.
நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்
காங்கிஸ் ஆட்சியை அகற்றிய ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டே, சாம்ராஜநகருக்கு விஜயம் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் ஆட்சியை இழந்தார். 1989ஆம் ஆண்டு எஸ். ஆர். பொம்மையும் அதே வழியில் முதல்வர் பதவியை இழந்தார். 1990ஆம் ஆண்டு வீரேந்திர பாட்டீலும் சாமராஜநகருக்குச் சென்ற பிறகு முதல்வர் பதவியை இழந்தார். அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இத்தகைய தற்செயல் நிகழ்வுகள், அந்த நகரம் துரதிர்ஷடமானது என்ற எண்ணத்தை அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டன. இதுவே அடுத்த ஆறு காங்கிரஸ் முதல்வர்களையும் சாம்ராஜ்நகர் பக்கம் வராமல் விலகி இருக்க வைத்தது. எஸ்.பங்காரப்பா, வீரப்ப மொய்லி, எச்.டி. தேவகவுடா, ஜே.எச். படேல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம் சிங்கும் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் சாம்ராஜ்நகர் பக்கமே போக வேண்டாம் என முடிவு செய்தனர்.
பாஜகவின் பி.எஸ். எடியூரப்பாவும் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு சாம்ராஜ்நகருக்குச் செல்லவில்லை. மறுபுறம், 17 ஆண்டுகளில் முதல் முறையாக எச்.டி. குமாரசாமி சாம்ராஜ்நகருக்குச் சென்ற பின்பு முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், பின்னர் அவரும் நீண்ட காலம் முதல்வர் பதவியில் நீடிக்கவில்லை.
சிறந்து விளங்கும் தமிழக புலிகள் காப்பகங்கள்: பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் பாராட்டு
சித்தராமையாவைப் பொறுத்தவரை, அவர் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு 8-10 முறை சாம்ராஜ்நகர் சென்றார். 2018ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி சாம்ராஜ்நகருக்கு வராததைக் குறிப்பிட்டுத் தாக்கிப் பேசினார். சித்தராமையா சாம்ராஜ்நகருக்குப் பலமுறை சென்றபோதும், தனது 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தார். ஆனால், அவர் சாம்ராஜ்நகருக்குச் சென்றதால்தான் 2018ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
1997ஆம் ஆண்டு மைசூருவில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது சாம்ராஜ்நகர். அமைச்சர்கள் யாரும் பார்வையிடச் செல்லாமல் இருப்பதும் அந்த மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு ஜீப்பில் வன உலா சென்று காட்டுயிர்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு விதவிதமான போஸ் கொடுத்துக்கொண்ட பல படங்களை ட்விட்டரில் பதிவிட்டார்.
நானே டிரைவராக இருந்தபோதுதான் அந்த கஷ்டங்கள் புரிந்தன: மனம் திறக்கும் உபெர் சிஇஓ