Emergency in India 1975: ஏன்? எதற்காக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது?

By Dhanalakshmi GFirst Published Jun 25, 2022, 12:26 PM IST
Highlights

இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆம் இன்றுதான் மறைந்த பிரதமர் 
இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சுமார் 21 மாதங்கள் 
எமர்ஜென்சி அமலில் இருந்தது. 

இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆம் இன்றுதான் மறைந்த பிரதமர் 
இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சுமார் 21 மாதங்கள் 
எமர்ஜென்சி அமலில் இருந்தது. 

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டில் ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சியை பரிந்துரைத்தார்.
எமர்ஜென்சி 1977 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வரை சுமார் 21 மாதங்கள் அமலில் இருந்தது. 
உள்நாட்டில் எழுந்து இருக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது என்று 
அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதின் அலி அகமது அறிவித்து இருந்தார். இந்திரா காந்தியின் 
பரிந்துரையின் பேரிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நாட்களை இந்தியாவின் கருப்பு நாட்கள் என்றும் அழைக்கப்படுகிறது.  அரசியல் அமைப்புச் 
சட்டத்தில் வழங்கப்பட்டு இருக்கும்  மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன என்று 
கட்சிகளும் சிவில் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.  


இந்திய அரசியமைப்புச் சட்டம் ஆர்டிகிள் 352ன் கீழ் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு இருந்தது. 
நாட்டுக்கு போர் அபாயம், உள்நாட்டில் இருந்து அச்சுறுத்தல்கள் அல்லது 
வெளிநாட்டில் இருந்து அச்சுறுத்தல்கள் எழுந்தால் இந்த சட்டத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி 
எமர்ஜென்சி (அவசர நிலை) பிரகடனம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இந்த சட்டத்தை பயன்படுத்தியே அப்போது எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது.

இன்றைய நாளில்தான் ஜனாதிபதி ஃபக்ருதினுடன் இந்திரா காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 
ஒரு மணி நேரத்தில் எமர்ஜென்சி அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் பல்வேறு 
எதிர்க் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களின் 
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மறுநாள், ஆல் இந்தியா ரேடியோவிலும் கட்டுப்பாடுகளை 
இந்திரா காந்தி விதித்தார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திரா காந்திக்கு எதிராக பெரியளவில் பேரணி 
நடத்தினார். ஊழல், பணவீக்கத்தை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் குரல் கொடுத்து வந்தார். 

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் அலகாபாத் நீதிமன்றம், ''அரசு பதவியில் ஆறு ஆண்டுகளுக்கு 
நீடிக்கக் கூடாது என்று தீர்ப்பு அளித்து இருந்தது. 1971ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், உத்தரப்பிரதேச 
மாநிலம் ராபரேலியில் இந்திரா காந்தி போட்டியிட்டார். அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்திரா காந்தி பிரதமராக நீடித்து வந்தார்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். தமிழ்நாட்டிலும் 
தற்போதைய முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எமர்ஜென்சிக்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை 
இழந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் தோல்வியை காங்கிரஸ் சந்தித்து இருந்தது. 1977ல் மார்ச் 
மாதம் நடந்த இடைத் தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வியை சந்தித்து இருந்தார். 

1975ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா இரண்டு முறை 1962ல் இந்தியா - சீனா போரின்போதும், 
1972ல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போதும் எமர்ஜென்சியை சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!