CAA Explained: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு பயன்படும்? சாதக பாதங்கள் என்னென்ன?

By SG Balan  |  First Published Mar 11, 2024, 7:08 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் மதரீதியாக பாதிக்கப்பட்ட அண்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க பயன்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அரசிதழிலும் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மதரீதியாக பாதிக்கப்பட்ட அண்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க பயன்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போன்ற அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்! தேர்தலுக்கு முன் மோடி அரசின் அதிரடி அறிவிப்பு!

சிஏஏ சட்டத்தில் விதிவிலக்கு:

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குறைந்தது 6 வருடங்கள் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். முன்னதாக, இதுபோல புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குறைந்தபட்ச காலவரம்பு 11 ஆண்டுகளாக இருந்தது.

அசாமின் கர்பி ஆங்லாங், மேகாலயாவின் கரோ மலைகள், மிசோரமில் உள்ள சக்மா மாவட்டம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா மாநில பழங்குடியினப் பகுதிகளுக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதன் எதிரொலியாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி! DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

எதிர்க்கும் மாநிலங்கள்:

ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிசிஏ சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு, சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார். இதன்படி இன்று சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே இந்தச் சட்டம் உருவாக்கப்படுகிறது என்றும் இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காகனது அல்ல என்றும் கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினார்.

ஆனால், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டம் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளன. சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க இடம் இல்லை என்பதைக் காரணம் காட்சி தமிழ்நாடு இச்சட்டத்தை எதிர்க்கிறது.

மகளுக்கு வாரி வழங்கும் அம்பானி! ஈஷா அம்பானியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

click me!