முகேஷ் அம்பானி & இஷா அம்பானியுடன் போட்டோ எடுத்த பாகிஸ்தான் பெண்.. யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

By Raghupati R  |  First Published Jul 30, 2024, 8:29 AM IST

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியுடனும், அவரது மகள் இஷாவுடனும் புகைப்படம் எடுத்துள்ளார். யார் அவர் என்பதை பார்க்கலாம்.


ஷர்மிளா ஃபருக்கி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இஷாவுடன் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில் முகேஷ் அம்பானியுடன் மற்றொரு படத்தை அவரது கணவர் ஹஷாம் ரியாஸ் ஷேக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள்பிரான்ஸ் தலைநகரில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பாரிஸில் உள்ள டிஸ்னிலேண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முகேஷ் அம்பானி தனது பேத்தியை கையில் வைத்திருப்பதைக் காணலாம். ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள சென்றிருப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. தற்போது அம்பானி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தவர்கள் யார் என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான ஷர்மிளா ஃபருக்கி சிந்துவில் உள்ள ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினர். ஃபருக்கி, முன்னாள் முதலீட்டு வங்கியாளரான ஹஷாம் ரியாஸ் ஷேக்கை மணந்தார். அவர் இப்போது ஊடக அதிபராக உள்ளார்.

டான் அறிக்கையின்படி, ஷேக்கின் தந்தை அகமது ரியாஸ் ஷேக் மத்திய புலனாய்வு ஆணையத்தின் (எஃப்ஐஏ) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆவார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவரை முகேஷ் அம்பானியுடன் வைரல் படத்தில் காணலாம். அரசியலில் சேருவதற்கு முன்பு, ஃபரூக்கி ஷோபிஸில் ஒரு தொழிலை மேற்கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் "பஞ்ச்வா மௌசம்" என்ற தொலைக்காட்சி தொடரிலும் தோன்றினார். அவரது தாய்வழி தாத்தா என்எம் உகைலி பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர், தந்தை உஸ்மான் ஃபாரூக்கி ஒரு முக்கிய பதவியில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஷர்மிளா ஃபருக்கி கராச்சியில் படித்தார். இப்போது இஸ்லாமாபாத்தில் தனது குடும்பத்துடன் இருக்கிறார்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!