உத்தரகாண்ட் புதிய முதல்வர் யார்? - பா.ஜ.க எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் நாளை முடிவு

 
Published : Mar 16, 2017, 10:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
உத்தரகாண்ட் புதிய முதல்வர் யார்? - பா.ஜ.க எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் நாளை முடிவு

சுருக்கம்

Who is the new Chief Minister of Uttarakhand? - BJP MLAs. Ekkal meeting tomorrow

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க அரசு நாளை பதவியேற்க உள்ள நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது.கோவா மாநில முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் மற்றும் மணிப்பூர் மாநில முதல்மந்திரியாக பிரேன் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் இன்று நபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல்வர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி புதிய முதல்வரை கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கும். இன்று தேர்ந்தெடுக்கப்படும் புதிய முதல்வர் வரும் 18-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்