தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?

By Pothy Raj  |  First Published Jul 22, 2022, 11:43 AM IST

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 22ம் தேதியை தேசிய கொடி வடிவமைக்கப்பட்ட நாளாக இந்தியா கொண்டாடி வருகிறது. 


ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 22ம் தேதியை தேசிய கொடி வடிவமைக்கப்பட்ட நாளாக இந்தியா கொண்டாடி வருகிறது. 

இந்தநாளில்தான் பல்வேறு தேசியத் தலைவர்களால் தற்போதுள்ள மூவர்ணக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாகும்.

Tap to resize

Latest Videos

அரசியலமைப்புச் சட்டக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள சட்டஅரங்கில் கூடி கடந்த 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இந்த தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி குறித்து முன்மொழிய அந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

சுதந்திர தினத்தின்போது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

குறிப்பாக, தேசியக் கொடி பக்கவாட்டில் ஆழ்ந்த காவிநிறத்திலும், நடுவரில் வெள்ளை நிறத்திலும், கடைசியாக பச்சை நிறமும் இருக்க வேண்டும். இந்த மூன்று வண்ணங்களுக்கும் சரிசமமான பங்களிப்பு இருக்க வேண்டும். வெள்ளை நிறத்துக்குள் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் உருவாக்கப்பட வேண்டும் என ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியக் கொடி குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. அதன்பின், 1947, ஆகஸ்ட் 16ம்தேதி டெல்லி செங்கோட்டையில், தேசத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றினார். 

மத்திய அரசின் அறிவிப்பின்படி, தேசியக் கொடியின் நீளம், அகலம் 3:2 என்ற விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.வெள்ளைக் கட்டத்தில் உள்ள சக்கரம் வெள்ளைக் கட்டத்தின் அளவில் இருக்கவேண்டும்.அதில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். 
தேசியக் கொடியின் வரலாறு

குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து!!

சுவாமி விவேகானந்தரின் மாணவராக இருந்த, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிஸ்டர் நிவேதிதா கூறுகையில், “ கடந்த 1904ம் ஆண்டு நான்தான் முதல் தேசியக் கொடியை வடிவமைத்தேன்” எனத் தெரிவித்தார்.

அந்த தேசியக் கொடி இரு கட்டங்களைக் கொண்டதாக இருந்தது. அதாவது மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும், வஜ்ராவின் அடையாளமும் இருந்தது, நடுவில் தாமரையின் சின்னமும் இருந்தது. வங்க மொழியில் வந்தே மாதரம் என்று எழுதப்பட்டிருந்தது.

அதன்பின் 1906ம் ஆண்டு தேசியக் கொடி மறுவடிவம் பெற்று நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களையும், 2 அடையாளங்களான சூரியன், நட்சத்திறங்களைக் கொண்டதாகவும் இருந்தது.தேசியக்கொடியில் வந்தே மாதரம் என எழுதப்பட்டிருந்தது.

அதே ஆண்டில் மற்றொரு தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டது. அந்தக் கொடியில் ஆரஞ்சு நிறம், மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்கள் இருந்தன. அந்தக் கொடியை தாமரைக் கொடி அல்லது கொல்கத்தா கொடி என அழைக்கப்படுகிறது.

Droupadi Murmu:ஜனாதிபதியாகிறார் திரெளபதி முர்மு: 20ஆயிரம் லட்டு தயார்: சொந்த ஊரில் கொண்டாட்டம் ஆரம்பம்

1907ம் ஆண்டு மேடம் காமா மற்றும் அவரின் குழுக்கள் சேர்ந்து, ஜெர்மனியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாளர், லோகமான்ய திலக் ஆகியோர் சேர்ந்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கத்துக்காக மற்றொரு தேசியக் கொடியை வடிவமைத்தனர்.

பலரும் தேசியக் கொடிக்காக பல்வேறு வடிவமைப்புகளைச் செய்தாலும், தேசியக் கொடியை வடிவமைத்த பெருமை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையாவைத்தான் சாரும்.

யார் இந்த பிங்காலி வெங்கையா?

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் பிங்காலி வெங்கையா. மகாத்மா காந்தியின் தீவிரமானஆதரவாளரான பிங்காலி வெங்கையாதான் தேசியக் கொடியை வடிவமைக்க முக்கியக் காரணமானவர்.

நிலவியலில் பட்டப்படிப்பு முடித்த பிங்காலி வெங்கையா, ஆந்திராவில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால்தான் வைரம் வெங்கையா என்ற பெயரும் உண்டு. இந்திய, ஆங்கிலேயப் படையில் வெங்கையா பணியாற்றியபோதுதான், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

சுதந்திரத்துக்கு முன் பல்வேறுவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்ட வந்தநிலையில் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், பிங்காலி வெங்கையாவிடம் தேசியக் கொடியை வடிவமைக்கும் பொறுப்பை மகாத்மா காந்தி கொடுத்தார். பிங்காலி வெங்கையா ஒரு கொடியை வடிவமைத்து விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வழங்கினார்.

2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

அந்தக் கொடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்றார்போல் இருந்தது. முதலில் தேசியக் கொடியில் நூல்நூற்கும் ராட்டையும், பின்னர் அதை நீக்கப்பட்டு அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் தேசியக் கொடியில் செய்யப்பட்டு, கராச்சியில் நடந்த காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது. 

தேசியக் கொடியின் நிறங்கள் எதைக் குறிக்கின்றன

தேசியக் கொடியில் உள்ள காவிநிறம், வலிமை, துணிச்சலையும், வெள்ளை நிறம் தர்மசக்கரம் அமைதி, உண்மையையும், பச்சை நிறம்,செழுமை, வளர்ச்சி, வளம் ஆகியவற்றையும் குறிக்கிறது.

click me!