டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த 4ஆம் தேதி தனது காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பினார். அப்போது, கார் பல்கார் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதி விபத்துள்ளானது.
இதில் சம்பவவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு நபரும் உயிரிவந்தார். கார் ஓட்டுநரும், மற்றொருநபரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, அதிவேகமும், ஓட்டுனரின் பிழையும் தான் கார் விபத்துக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு இறந்த இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரிந்தது. மேலும் 10 நிமிடங்களில் , காயமடைந்த இருவரை காரில் இருந்து வெளியேற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாக போலீசார் தெரிவித்தனர். சைரஸ் தலையில் காயம் ஏற்பட்டு உள் இரத்தப்போக்கு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக
இந்த விபத்தில் அனாஹிதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டேரியஸ் பண்டோல் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது கார் யார் ஒட்டியது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் அனஹிதா தான் அந்த ட்ரைவர்.
இவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மகப்பேறு டாக்டரான அனஹிதா, பார்சி சமுதாயத்தினருக்கு இனப்பெருக்க ரீதியாக இலவச சிகிச்சைகளை வழங்கி வருகிறார். தான் சார்ந்துள்ள பார்சி சமுதாயத்தினரின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இது தொடர்பான சிகிச்சைகளையும், இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்
எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் மிகுந்த நிபுணராக இருக்கும் அனஹிதா, சைரஸ் மிஸ்திரியின் குடும்ப மருத்துவர் ஆவார். அது தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவரின் தந்தை சமீபத்தில் இறந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் நடந்த பூஜை ஒன்றுக்கு கலந்து கொண்டு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த காரை அனஹிதா ஓட்டினார். அருகில் முன்பக்கம் அவரது கணவர் டைரியுஸ் பண்டோலும் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியில் 9 நிமிடத்தில், 20 கிலோ மீட்டரை கடந்ததே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!