பென்ஸ் காரில் வந்து ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிய நபர்… வைரலாகும் வீடியோ!!

By Narendran SFirst Published Sep 6, 2022, 6:59 PM IST
Highlights

பஞ்சாப்பில் அரசு ரேஷன் கடைக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பஞ்சாப்பில் அரசு ரேஷன் கடைக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள அரசு ரேஷன் கடையில் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது அங்கு நீல நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்த நபர் ஒருவர் மானிய விலையில் வழங்கப்பட்ட பருப்பு மற்றும் அரிசி மூட்டைகளை வாங்கி தனது கார் டிக்கியில் வைத்தார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதையும் படிங்க: மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம் !

person arrived in a Mercedes to buy free wheat under the Ata Dal scheme by Punjab Government. A video of Naloyan Chowk is going viral pic.twitter.com/9WHYN6IOaq

— Parmeet Singh Bidowali (@ParmeetBidowali)

இது தற்போது வைரலாக பரவி வருகிறது. மளிகைக் கடையில் வாங்க முடியாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) பிரிவினருக்கு ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அந்த நபரின் சைகை டிவிட்டர் பயனர்களில் சிலரை கோபப்படுத்தியுள்ளது. ரேசன் கடைகளில் ஒரு கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இதனால் மிகவும் ஏழை மக்கள் நல்ல உணவை பெற முடியும். இந்த நிலையில் ஆடம்பரமான காரில் வந்து ரேசன் கடையில் மானிய விலையில் வழங்கப்பட்ட பொருட்களை வாங்கி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: காங்கிரஸ்தான் காரணம்: கர்நாடக முதல்வர் மழுப்பல்

இதுக்குறித்து விளக்கம் அளித்த அந்த காரில் வந்த நபர், இது எனது உறவினரின் கார். அவர்கள் இந்தியாவில் வசிக்கவில்லை, எங்கள் இடத்தில் காரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது டீசல் கார் என்பதால் நாங்கள் அதை சில நாட்களில் ஸ்டார்ட் செய்து ஓட்டிவிட்டு நிறுத்துவோம். அதுபோல் காரை எடுத்துச்செல்லும் போது அந்தப் பகுதி வழியாக சென்றேன். அப்போது, ரேஷன் பொருட்களை எடுத்துச் சென்றேன். நான் ஒரு சிறிய வீடியோகிராபி தொழில் செய்து வருகிறேன். எனது குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்ப என்னிடம் போதுமான பணம் இல்லை என்று தெரிவித்தார். 

click me!