பிச்சை எடுத்த முன்னாள் ஆசிரியை! காப்பாற்றி அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்!

Asianet News Tamil  
Published : Jul 16, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
பிச்சை எடுத்த முன்னாள் ஆசிரியை! காப்பாற்றி அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்!

சுருக்கம்

who have been rescued by the former teacher who took the begging

தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். கேரள மாநிலம், தாம்பனூர் ராயில்நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை அவர் எடுத்துத் திண்றப்பார்த்த பெண்மணி ஒருவருக்கு அதிர்ச்சி.

அந்த முதிய பெண்மணி, மலப்புரம் பள்ளியில் தான் படித்தபோது கணித ஆசிரியையாக இருந்தவர் என்பதை உணர்ந்தார். உடனடியாக அவருக்கு உணவு வாங்கி அளித்தார்.

அதோடு, தனது முன்னாள் ஆசிரியைக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். தான் எடுத்த படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அது வைரலாகியது.

அந்த முன்னாள் ஆசிரியையின் மாணவர்கள் பலர் உதவ முன் வந்தனர். இப்போது ஆசிரியை பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார். பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், வளர்த்த பிள்ளைகள் (மாணவர்கள்) கைவிடவில்லை என்று நெகிழ்கிறார் அந்த முன்னாள் ஆசிரியர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்… உலகமே இந்தியாவை திரும்ப பார்க்குது.!!
இயேசு கிறிஸ்து ஒரு இந்தியரா..? DNA பரிசோதனையில் உறுதியான ரகசிய உண்மை..