மாணவியின் ஆடையை களைந்து அந்த இடத்தில் கிள்ளிய பெண் ஆசிரியை! குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : Jul 15, 2018, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
மாணவியின் ஆடையை களைந்து அந்த இடத்தில் கிள்ளிய பெண் ஆசிரியை! குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

female teachers sexual harass attacking girl student

வகுப்பறையில் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில், மாணவியின் ஆடையை களைந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் 2 ஆசிரியைகள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 5 வயது மாணவி ஒருவர் முதலாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயது என்பதால், விளையாட்டுத்தனமாக இருந்த மாணவி, வகுப்பறையில் பாடத்தை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதை பலமுறை கவனித்து ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும், ஏதுமறியா அந்த சிறுமிக்கு பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, அதில் நாட்டம் ஏற்படாமால் வேறு எதையோ கவனித்து கொண்டிருந்துள்ளார்.

பலமுறை கூறியும் மாணவி கேட்காததால், ஆத்திரமடைந்த நுதான் என்ற ஆசிரியை, சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், மற்ற மாணவ, மாணவிகள் முன்பு அவமானப்படுத்தினால்தான், மாணவி திருந்துவார் என நினைத்த அந்த ஆசிரியை, வகுப்பறையிலேயே மொத்த ஆடைகளையும் களையச் சொல்லி துன்புறுத்தினார். சிறுமியின் கட்டாயத்தின் பேரில், ஆடைகளை களைந்து, பிறந்த மேனியாக வகுப்பறையில் நின்றிருந்தபோது, இந்து என்ற ஆசிரியையும் அங்கு வந்தார்.

அவராவது நம்மை நல்ல பிள்ளை என்று கூறுவார் என சிறுமி நினைத்திருந்த நேரத்தில், ”இவள் எப்போதும் இப்படித்தான், முட்டாள்.. பாடத்தை கவனிக்கவே மாட்டாள், தண்டம்” என வாய்க்கு வந்தபடி சரமாரியாக திட்டிய ஆசிரியை இந்து, மாணவியின் மர்ம பகுதியை பிடித்துக் கிள்ளியுள்ளார். இதில் வலி தாங்காமல் மாணவி கதறி துடித்தார். ஆனாலும் மனம் இறங்காத அந்த ஆசிரியை கொடூரமாக கிள்ளியதில் மாணவியின் மர்ம பகுதியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியத் தொடங்கியது.

ரத்தம் வருவதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள் இருவரும் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை செய்து, வீட்டில் யாரிடமும் இதை சொல்லக் கூடாது என மிரட்டி அனுப்பினர். வீட்டுக்கு வந்த சிறுமி வலிதாங்க முடியாமல், தாயிடம் நடந்ததை அரைகுறையாக சொன்னார். இதனால், அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர், ஆசிரியைகள் மீது பள்ளி மீதும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினரும், ஆசிரியையகள் நுதான் மற்றும் இந்து மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் ஜாமீனில் வெளிவந்து விட்ட நிலையில், இந்த வழக்கு பாட்னா மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதியில் ஆசிரியைகள் இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரத்தை, ஜூலை 20ஆம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியைகள் நுதான் மற்றும் இந்து மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்… உலகமே இந்தியாவை திரும்ப பார்க்குது.!!
இயேசு கிறிஸ்து ஒரு இந்தியரா..? DNA பரிசோதனையில் உறுதியான ரகசிய உண்மை..