10 வருட தோல்வியை மறைக்கும் மோடி... காங். கருப்பு அறிக்கையில் பொய்களை போட்டு உடைந்த கார்கே!

By SG Balan  |  First Published Feb 8, 2024, 12:21 PM IST

2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் சாதனைகளை பட்டியலிடும் பாஜக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னதாகவே காங்கிரஸின் இந்தக் கருப்பு அறிக்கை வெளிவந்துள்ளது.


கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி அதற்குப் போட்டியாக 'கருப்பு அறிக்கை' ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழன் காலை இந்தக் கருப்பு அறிக்கையை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

"எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பதை மத்திய அரசு ஒருபோதும் கூறாது. அவர்கள் நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்துவிட்டார்கள். மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறார்கள்" என்று சரமாரியாக சாடினார். காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அவர், "இன்று நீங்கள் தானே ஆட்சி செய்கிறீர்கள்? இன்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் சாதனைகளை பட்டியலிடும் பாஜக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னதாகவே காங்கிரஸின் இந்தக் கருப்பு அறிக்கை வெளிவந்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக அரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவித்திருந்தார்.

"2014 வரை நாம் எங்கிருந்தோம், இப்போது எங்கே இருக்கிறோம்" என்று பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த அறிக்கையின் பின்னால் உள்ள ஒரே நோக்கம், கடந்த ஆண்டுகளின் தவறான நிர்வாகத்திலிருந்து படிப்பினைகளைப் பெறுவதுதான் என்றும் அவர் கூறினார்.

காணாமல் போய் 22 வருஷம் ஆகிருச்சு... சாமியாராக மாறி தாயிடம் பிச்சை கேட்டு வந்த மகன்!

குறுகிய நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்ங்கள் நடந்தன. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் குறித்து குற்றச்சாட்டுகளைக் கூறினார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது அரசாங்கம் நாட்டை எவ்வாறு மாற்றியது என்றும் பிரதமர் சொன்னார்.

பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பதில் அளித்துள்ள கார்கே, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி குறித்து எண்ணற்ற பொய்களை பிரதமர் மோடி அள்ளி வீசியிருப்பதாகக் குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, ஜிடிபி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி மற்றும் காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்கள் ஆகியவற்றை கார்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்.

"10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், தங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல், காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சித்துக்கொண்டு இருக்கிறார். இன்றும் இருக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி ஏன் பேசவில்லை?" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். "மோடியின் உத்தரவாதம் என்பது பொய்களைப் பரப்புவதற்கு மட்டுமே!" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்

"கருப்பு அறிக்கை மூலம் மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்ற 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏகள் பாஜகவால் வாங்கப்பட்டுள்ளனர். அவர்களால் காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. அவர்கள்தான் ஜனநாயகத்தை அழித்து வருகிறார்கள்" என கார்கே கூறினார்.

இதற்கிடையில், பாஜக தலைவர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியை விட்டு வெளியேறியபோது நாட்டின் மோசமான பொருளாதார நிலை மற்றும் பாஜக ஆட்சி எவ்வாறு திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை மத்திய அரசு வெளியிட இருக்கும் 'வெள்ளை அறிக்கை' எடுத்துக்காட்டும் எனத் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய சின்ஹா, 2013ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியா உலக அளவில் பலவீனமான ஐந்து பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது எனக் கூறினார்.

"இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது. பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்தது. வங்கிகளின் வாராக்கடன் 10 சதவீதமாக உயர்ந்தது. நாடே நெருக்கடியை சந்தித்து வந்தது" என்று கூறிய சின்ஹா மோடியின் அரசு இந்தியாவுக்குத் திருப்புமுனையை கொண்டுவந்துள்ளது என்றார்.

"வெள்ளை அறிக்கையில் 2014 க்கு முன் பொருளாதார நிலை எப்படி இருந்தது... பொருளாதார பிரச்சனைகளை நாங்கள் எப்படி சமாளித்தோம் என்பதைத் தெளிவுபடுத்துவோம்" என்றும் ஜெய்ந்த் சின்ஹா கூறினார்.

2024 தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுமா? சர்வே முடிவுகள் இதோ..

click me!