'சூப்பர்' செய்தி மக்களே.. இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு... மத்திய அரசு தகவல் !!

By Raghupati RFirst Published Feb 6, 2022, 11:50 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று குறைந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா 4-வது அலையும் இந்தியாவில் கொரோனா 3-வது அலையும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 21,96,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலகம் நாடுகளில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 8,072 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,41,448 ஆகும். 

இதனையடுத்து உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 393,536,754 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,751,584 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,27,952 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,07,474 ஆக குறைந்துள்ளது.

இது நேற்றைய பாதிப்பை விட 20,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,21,88,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 1,059 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 865 பதிவாகியுள்ளது.இதுவரை இந்தியாவில் 5,01,979 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,13,246 பேர் குணமடைந்துள்ளனர். 

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,61,148 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,31,648 ஆக இருந்த நிலையில்,12,25,011 குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை  1,69,46,26,697 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 45,10,770 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன' என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

click me!