அரசு ஊழியர்களுக்கு 'மகிழ்ச்சி' செய்தி... இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை.. அரசு அதிரடி அறிவிப்பு !!

Published : Feb 06, 2022, 06:06 AM IST
அரசு ஊழியர்களுக்கு 'மகிழ்ச்சி' செய்தி... இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை.. அரசு அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. இனி அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்பதே அந்த குட் நியூஸ் ஆகும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற திட்டத்தை செயல்படுத்தும்.

ஓய்வூதிய திட்டத்தில், மாநில அரசின் பங்களிப்பு, 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, சத்தீஸ்கர் மாநில அரசு பிறப்பித்து உள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பால், அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதேபோல நடைமுறையை கொண்டுவருவர்களா ? என்ற கேள்வி அரசு ஊழியர்களிடையே எழுந்து இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!
பத்மஸ்ரீ, பாரத ரத்னா-ன்னு பேருக்கு முன்னாடி போடக்கூடாது! கறார் காட்டிய உயர் நீதிமன்றம்!