இந்தியாவில் அதிக கல்லூரிகள் கொண்ட டாப் 10 மாநிலங்கள்.. தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?

By Ramya sFirst Published Jan 27, 2024, 8:30 AM IST
Highlights

நாட்டிலேயே அதிக  கல்லூரிகள் கொண்ட டாப் 10 மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம், நாடு முழுவதும் கல்லூரிகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி 2021-22-ம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான அகில இந்திய சர்வே முடிவுகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

நாட்டில் உயர்கல்வியை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளும் இதில் அடங்கும். 328 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 45,473 கல்லூரிகள் AISHE இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூரிகள் 2021-22 கணக்கெடுப்பில் பதிலளித்துள்ளன.. அதன்படி நாட்டிலேயே அதிக  கல்லூரிகள் கொண்ட டாப் 10 மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலலில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடாகா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

Latest Videos

கல்லூரிகள் உள்ளன என்று மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றனர். காராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளன. அதே போல் இந்த பட்டியலில் ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.

தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி!

8,375 கல்லூரிகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டிலேயே அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. 4,692 கல்லூரிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா இந்த பட்டியலில் 2-வது இடத்திலும், 4,430 கல்லூரிகளுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியல் 3,934 கல்லூரிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 2,829 கல்லூரிகளுடன் தமிழ்நாடு 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2,702 கல்லூரிகளுடன் மத்திய பிரதேசம் 6-வது இடத்தில்  2,602 கல்லூரிகளுடன் ஆந்திரா 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் 2,395 கல்லூரிகளுடன் குஜராத் 8-வது இடத்திலும், 2,083 கல்லூரிகளுடன் தெலங்கானா 9-வது இடத்தில் உள்ளது. 1,514 கல்லூரிகளை கொண்டுள்ள மேற்குவங்கம் அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது..

குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை மையப்படுத்திய ராமர் அலங்கார ஊர்தி!

கணக்கெடுப்பில் பங்கேற்ற மொத்தம் 42,825 கல்லூரிகளில், 60 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகள் பொதுக்கல்லூரிகள் என்றும், 8.7 சதவீத கல்லூரிகள் கல்வி அல்லது ஆசிரியர் கல்வியில் நிபுணத்துவம் பெற்றவை என்றும், 6.1 சதவீத கல்லூரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றும், 4.3 சதவீத கல்லூரிகள் நர்சிங் கல்லூரிகள் எனவும், 3.5 சதவீத மருத்துவக் கல்லூரிகள் என்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் பங்கேற்ற 42,825 கல்லூரிகளில் 14,197 கல்லூரிகள் முதுகலை படிப்புகளை பயிற்றுவிக்கினன,, 1,063 பிஎச்டி சேர்க்கைகள் உள்ளன" மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!