இரு ஜனாதிபதிகளும் பயணித்த "சாரட் வண்டி".. அது பாகிஸ்தானிடம் டாசில் வென்றதாம் - வியக்கவைக்கும் வரலாறு இதோ!

By Ansgar R  |  First Published Jan 26, 2024, 5:26 PM IST

இந்தியாவின் 75வது குடியரசு தினமான இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இருந்து கர்தவ்யா பாதையில் நடந்த மாபெரும் அணிவகுப்பில் பங்கேற்க சென்றனர்.


இந்த குறுகிய தூர சம்பிரதாயப் பயணத்திற்காக, இரண்டு ஜனாதிபதிகளும் காலனித்துவ காலத்தை சேர்ந்த ஒரு திறந்த சாரட் வண்டியில் பயணம் செய்தனர். சுமார் 40 வருட இடைவெளிக்குப் பிறகு, குடியரசு தின விழாவிற்கு குடியரசுத் தலைவரின் இந்த வண்டி மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான கவச அமைப்போடு உள்ள சொகுசு கார் தான் இதற்கு பயன்படுத்தப்படும்.

சரி இந்த வண்டியின் வரலாறு குறித்து பார்க்கலாம். 

Latest Videos

undefined

ஆறு குதிரைகள் மூலம் இழுக்கப்படும் இந்த சாரட் வண்டி, கருப்பு நிறத்தில் தங்க முலாம் பூசப்பட்ட விளிம்புகள், சிவப்பு வெல்வெட் உட்புறம் மற்றும் அசோக சக்கரம் ஆகியவை முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் வைஸ்ராய்க்கு சொந்தமானதாக இருந்தது. சம்பிரதாய நோக்கங்களுக்காகவும், ஜனாதிபதி (அப்போது வைஸ்ராய்) தோட்டத்தைச் சுற்றிப் பயணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.

75ஆவது குடியரசு தினம் – மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு!

இருப்பினும், காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததும், இந்தியாவும் புதிதாக உருவான பாகிஸ்தானும் இந்த ஆடம்பரமான வண்டிக்கு போட்டியிட்டனர். இறுதியில் இதை எந்த நாடு தங்கள் வசம் வைத்திருக்கலாம் என்பதை தீர்மானிக்க, இரு நாடுகளும் ஒரு தனித்துவமான தீர்வைக் கொண்டு வந்தன. அது தான் ஒரு லக்கி காயின் டாஸ்.

ஒரு லக்கி காயின் டாஸ்

ஆம் நாணயத்தை சுண்டி, அதில் வெற்றிபெறுபவர்கள் இந்த வண்டியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவின் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் மற்றும் பாகிஸ்தானின் சஹாப்ஜாதா யாகூப் கான் நாணயத்தை சுண்டினார். விதியின்படி, கர்னல் சிங் இந்தியாவுக்காக தனது வெற்றியை பெற்று அந்த வாகனத்தை இந்தியாவின் வசமாக்கினார். 

பின்னர், பதவியேற்பு விழாவிற்காக ராஷ்டிரபதி பவனில் இருந்து பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி சவாரி செய்ய இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. ஜனவரி 29 அன்று குடியரசு தின விழாவின் முடிவைக் குறிக்கும் வகையில், கர்தவ்யா பாதையில் உள்ள விஜய் சவுக்கில் நடந்த பீட்டிங் ரிட்ரீட் விழாவிற்கு மாநிலத் தலைவரை அழைத்துச் செல்லவும் இந்த வண்டி பயன்படுத்தப்பட்டது.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதிக்கான பொதுவான போக்குவரத்து வாகனமாக இருந்த வண்டியின் பயன்பாடு, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு குண்டு துளைக்காத கார்களால் இந்த புகழ்மிக்க வாகனங்கள் மாற்றப்பட்டன. இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டில், இந்த வரலாற்று சிறப்புமிக்க வாகனம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பீட்டிங் ரிட்ரீட் விழாவில் கலந்து கொள்ள இதில் தான் வந்தார்.

75ஆவது குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பு!

click me!