ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா. இந்த தம்பதிக்கு ராமகிருஷ்ணா(11), விஜய்(6) என்ற இருமகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பானி பூரி கடையில் இருவரும் பானி பூ சாப்பிட்டுள்ளனர்.
பானி பூரி சாப்பிட்ட சிறுவர்கள் இரண்டு பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா. இந்த தம்பதிக்கு ராமகிருஷ்ணா(11), விஜய்(6) என்ற இருமகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பானி பூரி கடையில் இருவரும் பானி பூ சாப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- கங்கை நீரில் குளித்தால் நோய் குணமாகும்.. 5 வயது சிறுவனின் உயிரைப் பறித்த மூடநம்பிக்கை.. என்ன நடந்தது?
தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் உயிரிழந்ததாக பெற்றோர்கள் கூறினர்.
இதையும் படிங்க;- ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டதால் சிறுவர்கள் உயிரிழந்தர்களா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.