இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வர்த்தக நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் மல்லையா மற்றும் நீரவ் மோடி எங்கே என்ற கேள்வியை தொடர்ச்சியாக பிரதமர் மோடி முன்வைத்து வருகின்றார்
விஜய் மல்லையா,நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்கி, இந்த மூவரும் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் தற்பொழுது நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இவர்களை அவர்கள் இருக்கும் நாட்டில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இவர்கள் மூவரும் சுமார் 22,800 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு இந்திய வங்கிகளில் இருந்து பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்கிலாந்திற்கு தப்பியோடியுள்ள நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா குறித்து பேசுகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வர்த்தக நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் மல்லையா மற்றும் நீரவ் மோடி எங்கே என்ற கேள்வியை தொடர்ச்சியாக பிரதமர் மோடி முன்வைத்து வருகின்றார் என்று கூறியுள்ளார் ஹரிஷ் சால்வே.
ஏசியாநெட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோம்: கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு
ஹரிஷ் சால்வே இந்தியாவில் உள்ள மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர், இங்கிலாந்து அதிகாரிகளை சந்திக்கும்போதெல்லாம், பிரதமர் மோடி கேட்கும் முதல் கேள்வி, விஜய் மல்லையாவும், நிரவ் மோடியும் எங்கே? என்பது தான்.
இங்கிலாந்து, ஒரே நேரத்தில் இந்தியாவின் வர்த்தக பங்காளியாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்களின் இல்லமாகவும் இருக்க முடியாது என்று இங்கிலாந்து அரசிடம் பிரதமர் மோடி கடுமையாக கூறியுள்ளார், இதை ஹரிஷ் சால்வே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மற்றும் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளதால், இங்கிலாந்து அரசு இந்திய தரப்பிலிருந்து பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது என்றும் அவர் கூறினார்.
முஸ்லீம் பெண்கள் பொது சிவில் சட்டம் பற்றி என்ன நினைக்கின்றனர்? கருத்துக்கணிப்பு முடிவுகள்