kejriwal: aap: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்கு எங்கு நிர்வகிக்கப்படுகிறது? அம்பலமான புதிய தகவல்

By Pothy RajFirst Published Aug 17, 2022, 2:43 PM IST
Highlights

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்கு எங்கு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்கு எங்கு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி இந்தியன் அபையர்ஸ் என்ற இணையதளம் ஆம் ஆத்மி தலைவர்கள் குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், டெல்லி முதல்வரின் பேஸ்புக் கணக்கு இந்தியா, கத்தார், மற்றும் அமெரிக்காவில் நிர்வகிக்கப்படுகிறது.

கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல்

இதேபோல பஞ்சாப்பில் ஆளும் ஆத்மி அரசுக்கு ஆலோசகராகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கும் ராகவ் சத்தாவின் பேஸ்புக் கணக்கு அமெரிக்காவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நிர்வகிக்கப்படுகிறது.

 

The Indian Affairs - That Has Grave National Security Implications For India & Indian Democracy pic.twitter.com/6xJLHswAHS

— The Indian Affairs (@ForIndiaMatters)

பஞ்சாப் மாநில அரசில் தகவல்தொழில்நுட்பம், மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கும் அமல் அரோராவின் பேஸ்புக் கணக்கு கனடாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நிர்வகிக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக் கணக்கும் லூதியானாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இயக்கப்படுகிறது. 
டெல்லி எம்எல்ஏவும், ஆம்ஆத்மி தலைவருமான ஆடிசி மர்லேனாவின் பேஸ்புக் கணக்கும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து இயக்கப்படுகிறது. 

சோனியா காந்தி அளித்த பதவியை நிராகரித்த குலாம் நபி ஆசாத்: மோதல் வலுக்கிறதா?

இவர்கள் கணக்குகள் அனைத்தும் எந்த நாட்டிலிருந்து, யாரால் இயக்கப்படுகிறது. அமெரிக்கா, கத்தாரிலிருந்து கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்குகளை இயக்குவதுயார் என்று கேள்வி எழுந்துள்ளது. கத்தார், அமெரிக்காவில்  இருந்து கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்குகளை இயக்குவது இந்தியர்களா அல்லது வேறு நாட்டவர்களா?

அமன் அரோரா, ராகவ் சத்தாவின் பேஸ்புக் கணக்குகளை கனடா, அமெரிக்காவிலிருந்து இயக்குவது யார், அவர்கள் விவரம் என்ன? 

லூதியானாவிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக் கணக்கை இயக்குவது யார், அவர்கள் விவரம் என்ன, ஏன் லூதியானாவிலிருந்து இயக்கப்படுகிறது

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேஸ்புக் கணக்கை இந்தியாவில் நிர்வகிக்காமல், அமெரிக்கா, கத்தார், கனடாவில் இருப்போரிடம் ஏன் ஆம் ஆத்மிஅளித்தது.

இதுபோன்ற செயல்பாடுகள் கண்டிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இதை ஏன் வரையரை செய்யக்கூடாது.

பாஜகவின் மூத்த தலைவர்களோ அல்லது எதிர்க்கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியோ தங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில்வசிப்போர் பராமரிக்கவும், இயக்கவும் அனுமதியளிக்கவில்லை.

பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் சமூகவலைத்தளக் கணக்கை வெளியேநாடுகளில் இருப்போரைவ வைத்து பராமரிப்பதில்லை. 

இந்த செய்தி யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் வெளியிடவில்லை. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை காப்பாற்றும் நோக்கிலும், உண்மையைத் தேசத்துக்கு தெரிவிக்கவும் வெளியிடுகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!