governor of kerala: கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல்

By Pothy RajFirst Published Aug 17, 2022, 1:51 PM IST
Highlights

கேரள ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் குறைக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் குறைக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா வரும் 22ம் தேதி தொடங்கும் கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும். 

சோனியா காந்தி அளித்த பதவியை நிராகரித்த குலாம் நபி ஆசாத்: மோதல் வலுக்கிறதா?

கேரள ஆளுநர் அதிகாரம் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசு, அட்வான்ஸ்டு லீகல் ஸ்டடீஸ் நேஷனல் யுனிவர்சிட்டியின் முன்னாள் துணைவேநத்ர் என்.கே.ஜெயகுமார் தலைமையில் கமிஷன் அமைத்தது. அந்த கமிஷன் அளித்த அறிக்கையில், “ ஆளுநர் மாநிலப்பல்கலைக்கழங்களில் அதிகமாக அதிகாரத்துடன் செயல்பட முடியாது” என கடந்த 10ம் தேதிதெரிவித்தது

அதுமட்டுமல்லாமல், துணை வேந்தர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 3லிருந்து 5 ஆக உயர்த்தியது. தற்போது 3பேர் கொண்ட குழுவில் ஆளுநர் சார்பில் ஒருவர், யூஜிசி சார்பில் ஒருவர் பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் உள்ளனர். இந்தக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பார்.

பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்

இந்த  புதிய சட்டத்திருத்தத்தன்படி, கூடுதலாக அரசின்சார்பில் ஒருவரும், மாநில உயர்கல்வித்துறை சார்பில் துணைத் தலைவரும் இடம்பெறுவார்கள். இதன் மூலம் ஆளுநருக்கான அதிகார வரம்பு குறைந்துள்ளது.

தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்.! ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

இந்த குழுவில் உள்ள 5 உறுப்பினர்களில் 3 பேர் எடுக்கும் முடிவுதான் செல்லும். 
ஆளுநர் ஆர்பி முகமது கான் கூறுகையில் “ என்னுடைய அதிகாரம் என்னிடம் இருக்கிறது. எந்த சட்டவிதிமுறை மீறலுக்கும் அனுமதிக்கமாட்டேன். நான் கையொப்பம் இட்டால்தான் சட்டமாகும்” எனத் தெரிவித்தார்.

click me!