பாஸ்போர்ட் பெறுபவர்கள் நலனுக்காக எம்பாஸ்வோர்ட் போலீஸ் ஆப்(mpassport police app) என்ற செயலியை மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட் பெறுபவர்கள் நலனுக்காக எம்பாஸ்வோர்ட் போலீஸ் ஆப்(mpassport police app) என்ற செயலியை மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பாஸ்போர்ட்டில் போலீஸார் விசாரணையை விரைந்து முடித்து பாஸ்போர்ட்டை குறைந்த நாட்களில் பெற முடியும். ஒருவர் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலீஸ் விசாரணை முக்கியமானதாகும்.
ஏற்றுக்கொள்ளுங்கள்| சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்த உத்தவ் தாக்கரேவுக்கு சரத் பவார் அறிவுரை
அவர் மீது ஏதேனும் குற்றவழக்குகள் இருக்கிறதா, தண்டனை பெற்றவரா, அவர் குறிப்பிட்டுள்ள உண்மை விவரங்கள் உள்ளிட்டவற்றை விசாரித்து போலீஸார் அறிக்கைக்குப்பின்புதான் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இதற்காக போலீஸ் விசாரணைக்காக மட்டும் 15 நாட்கள்வரை எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் பாஸ்போர்ட் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். இந்த தாமதத்தை மூன்றில் ஒருபங்காகக் குறைக்கவே, எம்பாஸ்போர்ட் போலீஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் போலீஸார் தங்கள் பாஸ்வோர்ட் விசாரணயை குறுகிய காலத்தில் அதிகபட்சமாக 5 நாட்களில் முடிக்கலாம்.
காவல்நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் விசாரணைக்காக செல்லும் காவலர்கள் இந்த எம்பாஸ்போர்ட் போலீஸ் செயலியை செல்போனில் பதவிறக்கம் செய்து எளிதாக விசாரணையை முடிக்கலாம். இந்த செயலியை போலீஸார் மட்டும், அதிலும் பாஸ்போர்ட் விசாரணைக்கா, விண்ணப்பதாரரின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பவர் மட்டும் செல்போனில் பதிவேற்றம் செய்யலாம்.
சிவிங்கிப் புலிகள் குவாலியர் வந்தன | தென் ஆப்பிரிக்காவிலிருந்து IAF விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன
டெல்லி போலீல் உதயமான நாள் கடந்த 16ம் தேதி கொண்டாடப்பட்டது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று 350 மொபை் டேப்ளட்களை போலீஸாருக்கு வழங்கினார். இந்த டேப்ளட்கள் மூலம் போலீஸார் பாஸ்போர்ட் விசாரணையை விசாரணையை காகிதத்தில் எழுதாமல், ஆன்லைனிலேயே விரைந்து முடிக்க முடியும்.
2022-ம் ஆண்டில் பாஸ்போர்ட் வழங்குவதில் பல்வேறு தாமதங்கள் நிலவின. அதில் முக்கியமானது போலீஸ் விசாரணைக்காக அதிக நாட்கள்எடுக்கப்பட்டன. இதைக் குறைக்கும் நோக்கில் இந்த எம்பாஸ்போர்ட் போலீஸ் ஆப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் காலம் 10 நாட்களாகக் குறையும்.