Gujarat Election Results 2022: குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்ன? ஓர் அலசல்!

By Pothy Raj  |  First Published Dec 9, 2022, 11:39 AM IST

குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ஆம் ஆத்மி கட்சியின் வருகையும், செளராஷ்டிரா பகுதி வாக்காளர்கள், பட்டிதார் இனத்தார் முற்றிலுமாக பாஜக பக்கம் சாய்ந்ததுதான் காரணமாகும் என வாக்கு எண்ணிக்கைக்கு பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ஆம் ஆத்மி கட்சியின் வருகையும், செளராஷ்டிரா பகுதி வாக்காளர்கள், பட்டிதார் இனத்தார் முற்றிலுமாக பாஜக பக்கம் சாய்ந்ததுதான் காரணமாகும் என வாக்கு எண்ணிக்கைக்கு பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரலாற்று  வெற்றி

Tap to resize

Latest Videos

குஜராத் சட்டசபைத் தேர்தலில் 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் இதுவரை எந்தக் கட்சியும் வெல்லமுடியாத அளவுக்கு அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. கடந்த 1985ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் வென்றதுதான் சாதனையாக இருந்தது. 

வியப்பு

அதை பாஜக இந்தமுறை முறியடித்துவிட்டது. தொடர்ந்து 7வது முறையாக, ஆட்சியில் அமரும் பாஜக, ஏற்கெனவே 27 ஆண்டுகள் ஆட்சியில்இருந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்.
இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி எந்த அளவுக்கு பிரமிப்பைத் தருகிறதோ அதே அளவுக்கு காங்கிரஸ்கட்சியின் தோல்வியும், வீழ்ச்சியும் வியப்பை அளிக்கிறது.

வாக்கு சதவீதம் தேய்ந்தது

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 24 லட்சத்து 38ஆயிரத்து 937 வாக்குகளாகும். அதாவது, 41.4 சதவீத வாக்குகளைப் பெற்று, 77 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என்பதால், வாக்குவங்கி சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கு பாதிக்கப்படவில்லை.

ஆனால், 2022ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வருகை காங்கிரஸ்க ட்சியின் வாக்கு வங்கி சதவீத்தை வாரிச்சுருட்டிக்கொண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு 27.28 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ்கட்சியின் வாக்குசதவீதம் 14 சதவீதம் குறைந்துவிட்டது.

ஆம்ஆத்மி சுனாமி

இந்த 14 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிக்கொண்டது. இந்தத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 12.90 சதவீதம் ஏறக்குறைய 13 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த 13 சதவீதமும் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை ஆம் ஆத்மிக்கு சென்றுவிட்டது.

ஆக, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஆம் ஆத்மி கட்சியின் வருகையும் முக்கியக் காரணமாகும்.
2வது முக்கியக் காரணம் செளராஷ்டிரா சமூகம், பட்டிதார் சமூகத்தினர் வாக்குகளை பாஜக கைப்பற்றியது காங்கிரஸ் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். 

செளராஷ்டிரா மண்டலம்

செளராஷ்டிரா மண்டலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜக இந்த முறை கைப்பற்றியது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளை வென்ற நிலையில் இந்த முறை வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

ஆனால், 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 19 தொகுதிகளை மட்டுமே வென்ற நிலையி்ல் இந்த முறை 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. வாக்கு சதவீதத்திலும் 2017ல் காங்கிரஸ் கட்சி 45.37 % பெற்றது, பாஜக 44.90% பெற்றது. ஆனால் இந்த முறை காங்கிரஸுக்கு வாக்கு சதவீதமும் குறைந்துவிட்டது.

பட்டிதார், ஓபிசி புறக்கணிப்பு

குறிப்பாட பட்டிதார் சமூகம், ஓபிசி சமூகத்தினர் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை வெல்வதற்கு அதிகமாக  உதவினர். குஜராத்தில் பட்டிதார் சமூகம் 11%, ஓபிசி பிரிவினர் 60%பேர் உள்ளனர். 

மத்திய குஜராத் மண்டலத்தில் இந்த முறை பாஜக 61 இடங்களில் 56 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வென்றது. 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 37 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் வென்றது.

பாஜக அபகரிப்பு

ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சி 18 இடங்களை பறிகொடுத்து வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. அதேசமயம் பாஜக இந்த முறை 19 இடங்களை கூடுதலாகக் கைப்பற்றியது. பாஜக கைப்பற்றியதொகுதிகள் அனைத்தும் காங்கிரஸ் வசம் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு குஜராதத்ில், 32 தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், 22 தொகுதிகள் பாஜகவுக்கும் சென்றுள்ளன. சுயேட்சைகள் 2 பேர் வென்றுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்ற நிலையில் இந்தமுறை 8 தொகுதிகளில்தான் வென்றுள்ளது. பாஜக, 14 இடங்களில் வென்றநிலையில், இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளை கூடுதலாக வென்று 22 ஆக உயர்த்தியுள்ளது.

ஆக காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இரு பெரும் காரணங்கள் ஆம் ஆத்மி வருகையும், பட்டிதார், செளராஷ்டிரா மண்டலத்தின் சரிவுஎன்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!