ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பெண்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

Published : Dec 08, 2022, 09:53 PM IST
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பெண்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

சுருக்கம்

ஆந்திராவில் ரயிலுக்கு நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆந்திராவில் ரயிலுக்கு நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம் அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா. 20 வயதான இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்சிஏ படித்து வந்தார். இவர் தினமும் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றார்.

இதையும் படிங்க: தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது ஆம் ஆத்மி… 12.9% வாக்குகள் பெற்று சாதனை!!

அங்கு குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு சென்றார். அப்போது, ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயற்பட்ட போது, தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் விழுந்து சிக்கிக் கொண்டார். இதில் காயமடைந்த சசிகலா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

இதையும் படிங்க: புயல் நேரத்தில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எவை? தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்!!

இதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு காயமடைந்த சசிகலாவை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட ரயில்வே மீட்பு படையினர் சிகிச்சைக்காக ஷீலாநகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகலா இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!