தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது ஆம் ஆத்மி… 12.9% வாக்குகள் பெற்று சாதனை!!

By Narendran S  |  First Published Dec 8, 2022, 8:08 PM IST

டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்திலும் தடம் பதித்த ஆம் ஆத்மி தேர்தல் ஆணைய விதிகளின் படி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 


டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்திலும் தடம் பதித்த ஆம் ஆத்மி தேர்தல் ஆணைய விதிகளின் படி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. 182 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: முன்பேசொன்னது ஏசியாநெட்! குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் மறுபுறம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாற அக்கட்சிக்கு இன்னும் ஒரு மாநிலத்தில் வாக்கு வங்கி உயர வேண்டியது இருந்தது. அதை இன்று ஆம் ஆத்மி பெற்றுவிட்டது. ஒரு கட்சி அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கட்சியாக 4 மாநிலங்களில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளைக் கைப்பற்றி 6% வாக்குகளோடு இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: குஜராத்தில் 12ம்தேதி பதவி ஏற்புவிழா! முதல்வராக தொடர்கிறார் பூபேந்திர படேல்

அதன்படி, குஜராத்தில் தற்போது ஆம் ஆத்மி 35 இடங்களில் இரண்டாவது இடத்தை  பிடித்துள்ளது. 5 இடங்களில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 12.9% வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி தேசியக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முன் டெல்லி, பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி மார்ச் மாதம் கோவாவில் நடந்த தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

click me!