தடம் புரண்டது விரைவு ரயில்… 3 பேர் உயிரிழப்பு; பலர் காயம்… மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து!!

Published : Jan 13, 2022, 07:16 PM IST
தடம் புரண்டது  விரைவு ரயில்… 3 பேர் உயிரிழப்பு; பலர் காயம்… மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து!!

சுருக்கம்

மேற்கு வங்கத்தில் குவாஹட்டி  - பிகானீர் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது அப்பகுதியிக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் குவாஹட்டி  - பிகானீர் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது அப்பகுதியிக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவாஹட்டி - பிகானீர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

மேலும் அருகிலுள்ள சில ரயில் பெட்டிகளும் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன. தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த விபத்து தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மாலை 5 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை சக பயணிகளின் உதவியுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், நிவாரண ரயில் ஒன்றையும் சம்பவ இடத்திற்கு ரயில்வே அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், திடீரென ரயில் முதலில் குலுங்கத் தொடங்கியது. அதன் பின்னர் சில பெட்டிகள் கவிழ்ந்தன. உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!