கருப்பாக இருந்த மருமகளை எரித்த மாமியார்! இளம் பெண்ணை துன்புறுத்திக் கொன்ற கொடூரம்!

 
Published : May 30, 2018, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
கருப்பாக இருந்த மருமகளை எரித்த மாமியார்! இளம் பெண்ணை துன்புறுத்திக் கொன்ற கொடூரம்!

சுருக்கம்

woman burnt to death by husbands family because of her dark

ஆகப் பெரும் வல்லரசாக உருவெடுக்கக் காத்திருக்கும் இந்தியாவின் தலைநகரில் நடந்த நிற்பாய சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் கருப்பாக இருந்ததால் நிறத்தைக் காரணம்காட்டி மருமகளை மகனுடன் சேர்ந்து எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரக்பூர் அருகிலுள்ள சக்மரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரபானி. இவர் பயங்கர தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது கணவர் சவுரப் மற்றும் மாமியார் சுமித்ரா ஆகியோர் இந்தக் கொலை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஷ்ரபானியின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரில், அதிகளவிலான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவைத்தோம். இரண்டு வருடங்களாக நிறத்தைக் காரணம்காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் ஷ்ரபானி கொடுமைக்கு ஆளாகினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஷ்ரபானிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையும் காரணமாக வைத்தும், அந்த பெண் கருப்பாக இருந்ததாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது எரித்து கொன்றுவிட்டார்கள் என தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மீதான வன்முறை 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, மாதர் சங்கத்தினர் தெரிவிக்கின்றார்கள். அதேபோல பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறதாம்....

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்.. ஆம்னி பேருந்து தீப்பிடித்து 10 பேர் உடல் கருகி பலி!