தொலைத்தொடர்பு துறையிலும் கால்பதித்த பதஞ்சலி நிறுவனம்...! சுதேசி சம்ரிதி சிம் கார்டு வெளியீடு...!

 
Published : May 30, 2018, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
தொலைத்தொடர்பு துறையிலும் கால்பதித்த பதஞ்சலி நிறுவனம்...! சுதேசி சம்ரிதி சிம் கார்டு வெளியீடு...!

சுருக்கம்

Sudeshi Samridhi SIM card issued by Patanjali

பாபா ராம் தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது தொலைத்தொடர்பு துறையிலும் கால்பதித்துள்ளது. அன்லிமிடெட் கால்கள், 2ஜிபி டேட்டாவுடன்
சுதேசி சம்ரிதி சிம் கார்டை பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தி உள்ளார்.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத பொருட்களை இந்தியா முழுதும் விற்பனை செய்து வருகிறது. மக்களுக்குத் தேவையான ஷாம்பு, பேஸ்ட், ஆர்கானிக் பொருட்கள் என்று பலவகை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிற்து இந்த நிறுவனம்.

அதேபோல் பதஞ்சலி ஆடை தயாரிப்பு, பாதுகாப்பு சேவை போன்ற துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பதஞ்சலி பொருட்கள் விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையிலும் கால் பதித்துள்ளது. அதாவது பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து சுதேசி சம்ரிதி என்ற பதஞ்சலி நிறுவனத்தின் சிம் கார்டையும் வெளியிட்டுள்ளது.

சுதேசி சம்ரிதி - சிம்கார்டை நேற்று பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த சிம் கார்டு, முதலில் பி.எஸ்.என்.எல் மற்றும் பதஞ்சலி ஊழியர்களுக்கு
மட்டுமே வழங்கப்படும் என்றும், பின்னர் நாடு முழுவதும் சுதேசி சம்ரிதியின் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவி வெளியிட்டுள்ள இந்த சிம் கார்டில் 144 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிடெட் கால்கள், 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.-கள்
போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

அது மட்டுமல்லாமல், சுதேசி சம்ரிதி சிம் கார்டு மூலம் 10 சதவிகித சிறப்பு சலுகையில் பதஞ்சலி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்.. ஆம்னி பேருந்து தீப்பிடித்து 10 பேர் உடல் கருகி பலி!