மேற்குவங்க பிரச்சார கலவரம்..! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!

By Asianet TamilFirst Published May 16, 2019, 10:34 AM IST
Highlights

மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலால் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே முடிக்குமாறு இங்குள்ள கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலால் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே முடிக்குமாறு இங்குள்ள கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. வரும் 19-ம்தேதி இதற்கான பிரச்சாரம் நிறைவு பெறுவதால் தீவிர பிரச்சாரத்தில் இருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். இந்த தீவிர பிரச்சாரத்திற்காக பா.ஜ.க தலைவர் அமித்ஷா பேரணி ஒன்றை மேற்கு வங்கத்தில் நடத்தினார். இந்த பேரணி நடந்து கொண்டிருக்கும் போது பா.ஜ.க.வினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது.

 

இதை போலீஸாரும் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த வன்முறையின் போது தத்துவ மேதை வித்யாசாகர் சிலையும் உடைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து கொள்வதால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். 

இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் உடனடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்திய அரசியலைமைப்பு சட்டம் 324-ஐ பயன்படுத்தி மே17-ம் தேதி மாலை முடிக்க வேண்டிய தேர்தல் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே மே16-ம் தேதி மாலை 6-மணிக்குள் முடிக்க உத்தரவிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

click me!