இந்த வருஷத்துக்கான தென் மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் ? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published May 14, 2019, 9:28 PM IST
Highlights

கேரளாவில்  வரும் ஜூன் 4-ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துளளது.

கடந்த ஆண்டு கேரளாவில் தென் மேற்கு பருவமழை மிகக் கடுமையாக  பெய்தது. 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் பருவ மழை  பெய்யலாம் என கேரள மக்கள் அச்சத்துளடம் உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி , தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை பொழிவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். 

இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது.  இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கும் குறைவாக பெய்யும் என வானிலை ஆய்வு மையமான ஸ்கை மேட் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 70 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமாகத்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!